நடத்தியது நடனப்பள்ளி..! கொடுத்ததோ பாலியல் தொல்லை..! போக்சோவில் பரதநாட்டிய கலைஞர் அதிரடி கைது..!

சென்னை அருகே பரதநாட்டியம் கற்றுகொள்ளச் சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

dance teacher arrested under pocso act

சென்னை ஆவடி அருகே இருக்கும் கிறிஸ்து காலணியைச் சேர்ந்தவர் ரவி சர்மா என்கிற பாலசுப்ரமணியம். பரத நாட்டிய கலைஞர் ஆன இவர், தனது வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். அதில் பல மாணவிகள் பரதம் கற்று வந்துள்ளனர்.

பாலசுப்ரமணியம் நடத்தி வரும் பரத நாட்டிய பள்ளியில் அவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 11 வயது சிறுமியும் நாட்டியம் கற்பதற்காக சேர்ந்துள்ளார். தினமும் பாலசுப்ரமணியம் வீட்டுக்கு சென்று மற்ற மாணவிகளுடன் நடனம் கற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 29 ம் தேதி வழக்கம் போல நாட்டிய வகுப்பிற்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை தனியே அழைத்துச் சென்று ஆசிரியர் பாலசுப்ரமணியம் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். வெளியே சொல்லக்கூடாது என மிரட்டவும் செய்துள்ளார்.

dance teacher arrested under pocso act

இந்த சம்பவத்திற்கு பிறகு சிறுமி பரதநாட்டிய பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அழுத்திருக்கிறாள். பெற்றோர் விசாரித்த போது, நடந்தவற்றை சிறுமி கூறியிருக்கிறாள். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள் 50 பேருடன் நேற்று இரவு பாலசுப்ரமணியம் வீட்டை முற்றுகையிட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதல்முறையாக கால்நடைகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை..! முதல்வர் எடப்பாடி அதிரடி..!

dance teacher arrested under pocso act

விரைந்து வந்த ஆவடி காவலர்கள், ஆசிரியர் பாலசுப்ரமணியத்தை அங்கிருந்து மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றனர். சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்படி பரதநாட்டிய ஆசிரியர் பாலசுப்ரமணியம், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். திருவள்ளுர் மகிளா நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்திய காவலர்கள், பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: "கலெக்டர் என்ன சரவண பவன் சர்வரா..? போனை வைடா ராஸ்கல்..!" வைரலான ஆடியோ.. பதறியடித்து விளக்கம் அளித்த ஆட்சியர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios