சென்னையில் அதிர்ச்சி! காணாமல் போன கல்லூரி மாணவி முகம், அந்தரங்க உறுப்புகளில் காயங்களுடன் சடலமாக மீட்பு?

சென்னை சூளைமேட்டில் உள்ள வாடகை வீட்டில் ஒன்றில் கல்லூரி மாணவி தனது தாயுடன் வசித்து வந்தார். இவரது தாய் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். 

chennai college student rape and murder in bus

சென்னையில் காணாமல் போன 19 வயது கல்லூரி மாணவி முகம் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சூளைமேட்டில் உள்ள வாடகை வீட்டில் ஒன்றில் கல்லூரி மாணவி தனது தாயுடன் வசித்து வந்தார். இவரது தாய் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். மகள் தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வந்துள்ளார். இந்நிலையில், கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையும் படிங்க;- கண்ட இடத்தில் கை வைத்து டீச்சர் செய்த டார்ச்சர்.. மாணவன் என்ன செய்தான் தெரியுமா?

chennai college student rape and murder in bus

இதனால், அதிர்ச்சியடைந்த தாய் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, மாதவரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இளம்பெண் சடலம் இருப்பதாக மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா! ரூ.500 இருந்தா போதும்! உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்

chennai college student rape and murder in bus

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சூளைமேட்டில் காணாமல் போன கல்லூரி என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண் கொடூரமாக தாக்கப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சடலத்தின் அருகில் சென்னை-பெங்களூரு பயண டிக்கெட்டை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios