பொள்ளாச்சியில் இளம் பெண்களை குறி வைத்து  காம வேட்டை நடத்திய வெறி பிடித்த சைக்கோ கும்பல் கல்லூரி, இளம் பெண்கள், திருமணமான பெண்கள்  என பாரபட்சம் பார்க்காமல் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அதற்கு உடன்படாத பெண்களை  பெல்ட்டால் அடித்தும், அதை வீடியோ எடுத்தும் வைத்துள்ளனர்.  அதுமட்டுமா ஆடைகளை கழற்ற மறுக்கும் பெண்களை அந்த கும்பல் செய்த அட்டூயங்கள் மிகவும் மிருகத்தனமாகவும் இருக்கின்றது. அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன்களில் அதை வீடியோகவும் எடுத்து வைத்து ரசித்தும் வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் கைதான சபரி, வசந்த குமார், சதீஷ் குமார், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரின் செல்போன்களை ஆய்வு செய்த போலீசார்  அந்த போனில் உள்ள வீடியோ காட்சிகளை பார்த்து அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளனர். கைப்பற்றிய போன்களில்  சுமார் 15000 வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அதில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷுடன் அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் ஒரு வீடியோவில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாகராஜுக்கு சொந்தமான டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கினர்.

நாதா பார் நாகராஜை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்த நிலையில் பார் நாகராஜ் தான் பேசும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புதிதாக வெளியான வீடியோவில் இருப்பது நான் அல்ல. சதீஷ்தான். என் மீது அடிதடி வழக்குகள் மட்டுமே இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கோ புகாரோ என் மீது கிடையாது. என் மீதான அடிதடி வழக்குகள் குறித்து காவல் துறை விசாரணைக்கு அழைத்தாலும் அதற்கு நான் ஆஜராவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் ரீதியாக ஆகாதவர்கள் என்னை வைத்து பலரை பழிவாங்க முயற்சிக்கிறார்கள், லேட்டஸ்ட் வீடியோவில் நான் இடம் பெறவில்லை, போலீஸ் அறிவுறுத்தலால் எனது சொந்த  கிராமத்தில் தங்கியிருக்கிறேன்,  எல்லோருமே என்னை தவறாகவே  பார்க்கிறார்கள். எனக்கும் என்னுடை குடும்பத்திற்கும் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள். இப்படியே செய்துகொண்டிருந்தாள் அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.