Asianet News TamilAsianet News Tamil

பெண் போலீசை "வரியா" என அழைத்து ஆபாச சைகை.. நம்ம 'தல ' க்கி எவ்ளோ தில்லு பாத்தீங்களா..!!

பெண் போலீசை "வரியா" என அழைத்து ஆபாச சைகைகளில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மானபங்க படுத்துதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகள்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

A man arrest who called women police officer  "Varia" and made an obscene gesture.
Author
Chennai, First Published Jun 7, 2022, 12:34 PM IST

பெண் போலீசை "வரியா" என அழைத்து ஆபாச சைகைகளில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மானபங்க படுத்துதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகள்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல்  ஆணையரகத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் காவல் சரக உதவி ஆணையராக இருந்து வருபவர் ரவிக்குமார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தாயாரை பார்த்துக் கொள்வதற்காக உதவி ஆணையர் ரவி சுழற்சிமுறையில் காவலர்களை பணியமர்த்தி உள்ளார். அதேபோல உதவி ஆணையரின் தாயாரை பார்த்துக்கொள்ள கானத்தூர் காவல் நிலைய பெண் காவலர் ஒருவரை அவர் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்தப் பெண் காவலர் தனது பணி முடிந்து பின்னர் பணியில் மாற்றுவதற்காக வரக்கூடிய மற்றொரு பெண் காவலருக்காக மருத்துவமனை வெளியில் காத்திருந்தார்.

A man arrest who called women police officer  "Varia" and made an obscene gesture.

அப்போது அந்த வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பெண் காவலரிடம்  வரியா.. வரியா.. என மிகவும் ஆபாச சைகைகள் காட்டி அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் காவலர் உடனே மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் மீண்டும் வெளியே வந்த அவரிடம் அதே நபர் ஆபாசமாக பேசி வரியா என அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலர் அந்த நபரிடம் இப்படித்தான் எல்லோரையும் கூப்பிடுவாயா, உனக்கு அக்கா தங்கைகள் இல்லையா என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த நபர் மேலும் பெண்களிடம் மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். அதேபோல் அந்த நபர் தனது நண்பர்களை வரவழைத்து பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பெண் காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

A man arrest who called women police officer  "Varia" and made an obscene gesture.

அந்தப் பெண் காவலரிடம் ஆபாசமாக பேசி ஆபாச சைகைகளில் ஈடுபட்டவர் தரமணி களிக்குன்றம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் 29 என தெரியவந்தது. இந்நிலையில் அவர் மீது 354 வன்முறையால் பெண்ணை மானபங்கம் படுத்துதல், 322 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் குணசேகரன் ஆகிய இருவரையும் கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல் தனது தாயாரை பார்த்துக்கொள்ள காவலர்களை பணியமர்த்திய உதவி ஆணையர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios