கேரள மாநிலம் மலப்புரம் அருகே தேனிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. அவரது மகன் முகேஷ் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். இந்த 9 வயது சிறுவனை  36 வயதான அவரது உறவுக்கார பெண்ணே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுவன் பள்ளி சென்று வீட்டுக்கு வந்தவுடன் அந்தப் பெண் சிறுவனை தனது விட்டுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறுவனுடன் அந்தப் பெண் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு மருத்துவர்களிடம் தன் மாமாவின் மனைவி தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். 

இதன் பின்னர் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த சிறுவனை மிரட்டி அந்த பெண் ஒரு ஆண்டுக்கும் மேலாக இவ்வாறு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. 

சிறுவனிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டு, பிறகு சிறுவன் குற்றம்சாட்டிய அந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அதை தொடர்ந்து, குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் படி போக்சோ சட்டத்தின் கீழ் அப்பெண் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.