காதலனை திருமணம் செய்வதற்காக நம்பி வந்த பெண்ணை 80 வயது முதியவரும், இளைஞரும் சேர்ந்து பாலியல் வன்முறை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

முகமது சலிமுதீன் என்ற 80 வயது முதியவர் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் எம்.எல்.ஏ குடியிருப்பில் வசித்து வருக்கிறார். அவரது உறவினரான அப்துல் என்ற இளைஞர் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்களின் பெற்றோர்களுக்கு இந்த விஷயம் தெரிந்து விடவே பலத்த எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து காதலனின் உதவியோடு வீட்டை விட்டு வெளிவந்த பெண்ணும், அப்துலும் முகமது சலிமுதீனிடம் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

காதலனின் உறவினர் என்பதால் நம்பிக்கை அடைந்த அப்பெண் எவ்வித சந்தேகமும் இன்றி சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார். சலிமுதீன் இந்த கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் பதிவு திருமணம் செய்து வைப்பதாகவும் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தான் அந்த பெண்ணுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து அளித்து அவர் சுயநினைவில் இல்லாத சமயத்தில் அந்த பெண்ணின் காதலன் அப்துலும், 80 வயது முதியவரான சலிமுதீனும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.

மயக்கம் தெளிந்த அப்பெண்ணிடம் அவரின் அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டி உள்ளனர். எதற்கும் அஞ்சாத அப்பெண் போலீசில் புகார் அளிக்கப் போவதாக கூறி அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். தங்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்காக திட்டம் திட்டிய அப்துலும், சலீமுதினும் அவர்களின் வீட்டிலிருக்கும் விலையுயர்ந்த பொருட்களை பெண் ஒருவர் திருடிக் கொண்டு சென்றதாக புகார் அளித்துள்ளனர்.

தப்பியோடிய அப்பெண், நடந்த விஷயங்களை எல்லாம் கூறி, பெண் ஆணையர் அஞ்சனி குமாரிடம் புகார் அளித்தார். மேலும் மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக சலிமுதீன் மற்றும் காதலனாக நாடகமாடிய அப்துல் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் மேலும் பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி இது போன்ற வீடியோக்கள் எடுத்து மிரட்டி வந்ததும் அம்பலமாகியுள்ளது.

சலிமுதீனுக்கு அரபு நாடுகளில் 4 மனைவிகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தும் தொழிலிலும் அவர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.