Asianet News TamilAsianet News Tamil

India corona:வேகமாக குறையும் கொரோனா..பாதிப்பு விகிதம் 1.68 சதவீதமாக குறைவு..இன்றைய நிலவரம்..

கடந்த 24 மணி நேரத்தில் 19,968 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

India corona case today
Author
India, First Published Feb 20, 2022, 3:05 PM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30.81 லட்சத்துக்கும் அதிகமாக (30,81,336) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 175.37 கோடியைக் (1,75,37,22,697) கடந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 48,847 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,20,86,383 ஆக அதிகரித்துள்ளது.தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.28 சதவீதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 19,968 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வாராந்திரத் கொரோனா பரவல் விகிதம்  2.27 சதவீதமாக உள்ளது.தினசரித் தொற்று விகிதம் 1.68 சதவீதமாக பதிவாகியுள்ளது.நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,24,187 ஆக உள்ளது. நாட்டில் கொரோனா நோய் தொற்றிற்கு சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.52 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,87,766 கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதுவரை நாட்டில் சுமார் 75.93 கோடி கொரோனா பரிசோதனைகள் (75,93,15,246) எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios