Pandian Stores 2 : அரசு வேலை கிடைக்க ரூ.10 லட்சத்தை தனது மாமனாரிடம் கொடுத்த செந்தில் பற்றி மீனா தனது மாமனாரிடம் போட்டுக் கொடுக்க துணிந்துள்ளார்.

Pandian Stores 2 : செந்தில் தனது கடையில் வேலை பார்க்க விருப்பம் இல்லாமல் எப்படியாவது அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் ரூ.10 லட்சம் பணத்தை மீனாவின் அப்பாவிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு எப்படியாவது அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதைப் பற்றி மீனாவிடம் செந்தில் சொல்லிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மீனா இது குறித்து மாமாவிடம் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும் என்ற காத்துக் கொண்டிருக்கிறார்.

வெளியில் சென்ற பாண்டியன்ட்டிற்கு வர, ராஜீ மற்றும் கதிர் இருவரும் தங்களது செமஸ்டர் ரிசல்ட் பற்றி கூறினார்கள். இதில், ராஜீ 81 சதவிகிதம் எடுத்து எல்லா பாடத்திலும் பாஸ் ஆகிவிட்டதாக கூறினார். ஆனால், கதிர் 4 பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து வழக்கம் போல் பாண்டியன் அவரை திட்ட தொடங்கினார். எனினும் ஃபுட் டெலிவரி, கார் டிரைவர் வேலை என்று இருந்தால், எப்படி படிக்க முடியும், படிப்பு தான் முக்கியம், ஒழுங்கா படித்தால் தானே என்று திட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஆனால், நீண்ட நேரம் திட்டாமல் கொஞ்சநேரத்திலேயே திட்டி முடித்துவிட்டு தனது ரூமிற்கு சென்றுவிட்டார். இதனால், செந்திலுக்கு கொஞ்சம் சந்தோஷம். தன்னைப் பற்றி தனது அப்பாவிடம் போட்டுக் கொடுக்கவில்லை என்று ஹேப்பியானார். எனினும் ஒரு விதமான பதற்றத்துடனே இருந்தார். மீனாவும் அப்படியே இருந்தார். ஆனால், அவரும் கடைசி வரை பாண்டியனிடம் ரூ.10 லட்சம் பணத்தை பற்றி வாய் திறக்கவில்லை.

இதற்கிடையில் செந்தில் தனது மாமனார் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தைப் பற்றி கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அந்த பணத்தை வேலைக்காக அதிகாரியிடம் கொடுத்துவிட்டதாக கூறுவார் என்றும் தெரிகிறது. அதன் பிறகு அவருக்கு அந்த வேலை கிடைக்காமல் போக குடும்பத்திற்குள் சண்டை வரும் என்று தெரிகிறது. இதெல்லாம் நடக்குமா என்பதை இனிவரும் எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு தான் தெரியவரும். இன்றைய எபிசோடு வரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 506 எபிசோடுகள் வரையில் வெற்றிகரமாக கடந்துள்ளது.