விப்ரோ நிறுவனம் Elite – Telecom, Automative, Embedded & CPPE பிரிவில் புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. 2023, 2024 பி.இ/பி.டெக் பட்டதாரிகள் பிப்ரவரி 28க்குள் விண்ணப்பிக்கலாம்.
விப்ரோ நிறுவனத்தின் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது விப்ரோ நிறுவனத்தின் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Elite – Telecom, Automative, Embedded & CPPE என்ற பெயரில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 2023, 2024-ம் ஆண்டில் பி.இ, பிடெட் பிரிவில் மெக்கானிக்கல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஃபர்மேஷ டெக்னாலி அல்லது சைபர் செக்யூரிட்டி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இன்ஜினிரியங்கி படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விப்ரோ நிறுவனத்தில் விண்ணப்பிக்க விரும்புவோருக்கு ஒரு அரியர் இருக்கலாம். ஆனால் பணிக்கு தேர்வாததற்குள் அதனை கிளியர் செய்ய வேண்டும்.
மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்திய கடற்படையில் 250 காலியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் கிடைக்கும். அதாவது மாதம் ரூ.29,166 கிக்டைக்கும். பணிக்கு சேர்ந்த பின் 6 மாதம் கழித்து ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு தோறும் சம்பள உயர்வு வழங்கப்படும்.
அதிக சம்பளம் தரும் டாப் 5 வேலைகள் இவைதான் தெரியுமா?
இந்த பணிக்கு 3 ரவுண்ட்களில் நேர்காணல் நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பிப்ரவரி 28-ம் தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். எனினும் கடந்த 3 மாதத்தில் விப்ரோ நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பத்தவர்கள் இந்த இண்ட்ர்வியூவில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம்.
ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பதற்கான லிங்க்
