Asianet News TamilAsianet News Tamil

தகுதியின் அடிப்படையில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு; நோ ரெகமண்டேஷன் அமைச்சர் தடாலடி

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்படுமே தவிற பரிந்துரையின் பெயரில் நிச்சயம் பணி வழங்கப்படாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Vacancies of guest lecturers posting filled only on interview says minister ponmudi
Author
First Published Dec 30, 2022, 4:22 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 1895 நபர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மூலமாக நியமிக்கப்பட்டனர். ஆனால் அதில் பல குளறுபடிகள் இருந்தது அது மட்டும் இல்லாமல் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதி ஆனவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

திமுக முன்னாள் எம்பி மஸ்தானை கொலை செய்துவிட்டு நாடகமாடிய 5 பேர் அதிரடி கைது

கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தமிழக முதல்வர் சொன்னதன் அடிப்படையில், இணைச் செயலர், கல்லூரி கல்வி இயக்குனர் உள்பட மூன்று பேர் கொண்ட குழு தான் அவர்களை நேர்முக தேர்வுக்கு வரவழைத்து அவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

மேலும் நேர்முக தேர்வுக்கு வரக்கூடிய விரிவுரையாளர்களிடம் அந்த துறை சார்ந்த நீண்ட அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் கேள்விகளை கேட்பதற்கு நியமிக்கப்படுவார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது

குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இந்த நேர்முக தேர்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. அதில் கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வு நடக்கும் எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு சதவீத இட ஒதுக்கீட்டின்படி 19 கௌரவ விரிவுரையாளர் பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

சபரிமலை; மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான காலியிடங்கள் மொத்தம் 50 பாடங்களில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில்  8 வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் பணிகளுக்கான நேர்முக தேர்வுகள் வருகிற 4ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறும்.

விண்ணப்பதாரர்களிடம் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் நேர்முக தேர்வின் போது அவர்களின் திறனை அறிந்து தேர்வு செய்யப்படுவார்கள். தரத்தின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பரிந்துரையின் அடிப்படையில் அல்ல. பிஎச்டி படித்தவர்கள் மற்றும் நெட், செட் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரியான முறையில் தகுந்தவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

9915 பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் யார் எந்த பாடத்திட்டங்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதை நாளைக்கு அறிவிப்போம். இந்த தேர்வு முறையில் முழுக்க முழுக்க இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios