வங்கி பணிக்கு முயற்சி செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!!
வங்கி தேர்வுகளை நடத்தும் இரண்டு பெரிய அமைப்பான IBPS, SBI-ன் 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வுகளின் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
வங்கி தேர்வுகளை நடத்தும் இரண்டு பெரிய அமைப்பான IBPS, SBI-ன் 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வுகளின் தேதி தற்போது வெளியாகியுள்ளது. வங்கித் தேர்வுகளை நடத்தும் இரண்டு பெரிய அமைப்புகளில் ஒன்றான IBPS நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகளுக்கு கிளார்க் (Clerk), ப்ரோபேஷனரி ஆபிசர்ஸ் (Probationary Officers), ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (Specialist Officers) மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் கீழ் உள்ள பதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்துகிறது.
இதையும் படிங்க: பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..
மற்றொரு அமைப்பான SBI தனது சொந்த நிறுவனத்திற்கான கிளார்க், ப்ரோபேஷனரி ஆபிசர்ஸ் (Probationary Officers), ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (Specialist Officers) காலியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கித் தேர்வுகளின் தேதிகளின் வெளியாகியுள்ளது.
வங்கித் தேர்வுகள் 2022:
IBPS, SBI தேர்வுகளின் தேதிகள்:
- IBPS கிளார்க் முதல்நிலைத் தேர்வு – செப்டம்பர் 2022
- IBPS கிளார்க் முதன்மைத் தேர்வு- அக்டோபர் 2022
- IBPS PO முதல்நிலைத் தேர்வு – அக்டோபர் 2022
- IBPS PO முதன்மைத் தேர்வு- நவம்பர் 2022
- IBPS RRB அதிகாரிகள் II மற்றும் III ஒற்றைத் தேர்வு- செப்டம்பர் 24, 2022
- IBPS RRB அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி அளவுகோல் I முதன்மைத் தேர்வு- அக்டோபர் 2022
- SBI கிளார்க் முதல்நிலைத் தேர்வு- நவம்பர் 2022
- SBI கிளார்க் முதன்மைத் தேர்வு- டிசம்பர் 2022
அனைத்து தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்கள் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும். இந்த தேர்வுகள் நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும்.