தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலைவாய்ப்பு: எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மருத்துவம் படித்தவர்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2 ஆண்டு ஒப்பந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரை கொடுக்கப்படும்.
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வித்தகுதி, வயது வரம்பு:
இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist) பணிக்கு எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 42 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
பணிக்காலம், ஊதியம்:
இந்த பணி ஒப்பந்தப் பணியாகும். தேர்வு செய்யப்படும் தகுதியான நபர் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் சேர்த்துகொள்ளப்படுவார். இந்த வேலையில் ரூ.60,000 முதல் 1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் ஐ.டி. துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள்: அமைச்சர் தியாகராஜன் வாக்குறுதி
தேர்வு செய்யும் முறை:
இந்தப் பணிக்கு தேர்வு எழுத்துத் தேர்வு கிடையாது. கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.vocport.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள இந்த வேலைவாய்ப்பு குறித்து கூடுதல் விவரங்கள் அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு அறிவிப்பைக் காணலாம்.
https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/DyCMO%20Specialist%20notification209202310361.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2023