Asianet News TamilAsianet News Tamil

2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

TRB Recruitment 2023: How to Apply for the Direct Recruitment of Graduate Teachers / Block Resource Teacher Educators sgb
Author
First Published Oct 25, 2023, 12:34 PM IST

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / கல்வியாளர்கள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி மாதம் 7ஆம் தேதி தேர்வு நடைபெறும்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிப்பைப் டவுன்லோட் செய்து பார்க்கலாம். இந்தப் பணியில் சேர்பவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை வழங்கப்படும்.

நேரடி நியமன முறையில் அரசு வேலை! கோவையில் உள்ளவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க!

மொத்தம் 2222 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை துறைவாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 23 பணியிடங்களும், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் 16 பணியிடலங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 2171 பணியிடங்களும் காலியாக உள்ளன.

பாட வாரியாகவும் காலிப் பணியிங்கள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, இயற்பியல் 293, வேதியியல் 290, தாவரவியல் 131, விலங்கியல் 132, வரலாறு 391, புவியியல் 106 என மொத்தம் 2222 காலிப் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது.

DIRECT RECRUITMENT OF GRADUATETEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023

முக்கிய தேதிகள்:

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 01-11-2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-11-2023

தேர்வு நடைபெறும் நாள்: 07-01-2024

Follow Us:
Download App:
  • android
  • ios