தமிழக சட்டக் கல்லூரிகளில் 132 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜனவரி 31 முதல் மார்ச் 3 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழக சட்டக்கல்லுாரிகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. சொத்து, கிரிமினல், தொழிலாளர், வரி, ஐ.டி., மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகள், ஆங்கிலம், சமூகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில் உதவி பேராசிரியர் 124, இணை பேராசிரியர் 8 என மொத்தம் 132 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 132 காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 31-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி மார்ச் 3ம் தேதி முடிகிறது. 

காலி பணியிடங்கள்:

இணைப் பேராசிரியர்- 8, உதவிப் பேராசிரியர் – 64, உதவிப்‌ பேராசிரியர்‌ (சட்ட முன்‌ படிப்பு)- 60 என மொத்தம் 132 காலி பணியிடங்கள்.

1. இணைப் பேராசிரியர் (Associate Professor)

காலியிடங்களின் எண்ணிக்கை: 8 

கல்வித் தகுதி:

இணைப் பேராசிரியர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்லூரியில் சம்மந்தப்பட்ட சட்டப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 வருடம் உதவிப் பேராசிரியராக அல்லது அதற்கு நிகரான பதவியில் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும், NET/SLET/SET ஆகிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : 

ரூ. 1,31,400 முதல் 2,17,100


2. உதவிப் பேராசிரியர் (Assistant professor)

காலியிடங்களின் எண்ணிக்கை: 

64

கல்வித் தகுதி: 

உதவிப் பேராசிரியர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்லூரியில் சம்மந்தப்பட்ட சட்டப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், NET/SLET/SET ஆகிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : 

ரூ. 68,900 முதல் 2,05,500

3. உதவிப் பேராசிரியர் (சட்டமுன் படிப்பு) (Assistant professor)(Pre-Law)

காலியிடங்களின் எண்ணிக்கை: 

60

கல்வித் தகுதி: 

சட்ட முன் படிப்பு உதவிப் பேராசிரியர் பதவிக்கு சம்மந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், NET/SLET/SET ஆகிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலையில் வேறு பாடம், முதுகலையில் வேறு பாடம் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை.

வயது வரம்பு: 

40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : 

ரூ. 57,700 முதல்1,82,400 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணியிடங்களுக்கு கட்டாய தமிழ் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. OMR முறையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

பொதுப் பிரிவினருக்கு ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் எஸ்சி/ எஸ்டி தேர்வர்கள் 300 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

2025 மாரச் 3ம் தேதி