TNTEU PhD Admission தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (TNTEU) ஜனவரி 2026 அமர்வுக்கான Ph.D சேர்க்கை அறிவிப்பு வெளியானது. தகுதி, கட்டணம் மற்றும் நுழைவுத் தேர்வு விலக்கு குறித்த முழு விவரம்.
ஆசிரியர் கல்வியியல் துறையில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான ஒரு மிகச் சிறந்த வாய்ப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அறிவித்துள்ளது. ஜனவரி 2026 அமர்விற்கான (January 2026 Session) முழுநேர மற்றும் பகுதிநேர முனைவர் பட்டப் படிப்புகளுக்கு (Ph.D) தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி என்ன? (Eligibility Criteria)
விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டப்படிப்பு (PG Degree) மற்றும் எம்.எட் (M.Ed) படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எஸ்சி/எஸ்டி (SC/ST), ஓபிசி (OBC - Non-creamy layer) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (40%க்கும் மேல் குறைபாடு உள்ளவர்கள்) 5% மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டு, 50% மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது.
நுழைவுத் தேர்வு உண்டா? (Selection Process)
வழக்கமாக நுழைவுத் தேர்வு (Entrance Exam) மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். யாருக்கு விலக்கு? ஏற்கனவே UGC-JRF, NET, SET, SLET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது M.Phil (Education) முடித்தவர்களுக்கு நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு (Exemption) அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்களும் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பக் கட்டணம் (Application Fee)
பொதுப்பிரிவு மற்றும் ஒபிசி (OC/OBC) விண்ணப்பதாரர்களுக்கு: ரூ. 1000.
எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு: ரூ. 750.
முக்கிய குறிப்பு: கட்டணத்தை www.tnteu.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். டிடி (Demand Draft) ஏற்றுக்கொள்ளப்படாது.
கடைசி தேதி எப்போது? (Deadline)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 05.12.2025 மாலை 5.00 மணி.
விண்ணப்பிப்பது எப்படி?
பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnteu.ac.in) விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
ஆன்லைனில் கட்டணம் செலுத்திய ரசீதை இணைத்து, "The Registrar, Tamil Nadu Teachers Education University, Gangaiamman Koil Street, Karappakkam, Chennai-600097" என்ற முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப உறையின் மீது "Application for Admission to Ph.D. Programme JANUARY-2026" என்று குறிப்பிட வேண்டும்.


