Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் அறிவிப்பு.. 8ஆவது படித்திருந்தாலே போதும்.. தமிழ்நாடு அரசு பணி.. ரூ58,000 வரை சம்பளம்..

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள 5 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.15,700 யிலிருந்து ரூ.58,100 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

TNSIC Recruitment 2022 for 5 office assistant post
Author
Tamil Nadu, First Published Aug 5, 2022, 5:01 PM IST

கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு: 

இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களை விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்கள்18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். எஸ்சி பிரிவை சேர்ந்தவர்கள் 18 முதல் 37 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.  பொதுபிரிவை சேர்ந்தவர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். அது தவிர பிற பிரிவுகளை சேர்ந்தவர்கள் 34 வயதுக்குள் இருத்தல் வேண்டும் 

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யும் முறை:

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.  
மேலும், தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை ஆப்லைன் முறையில் அனுப்ப வேண்டும். 

முகவரி:  

செயலாளர்,

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19 அரசு பண்ணை இல்லம்,

பேரன்பேட்,

நந்தனம்,

சென்னை.35

தளர்வு மற்றும் நிபந்தனை:

தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு அந்தந்த பிரிவினருக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலிபணியிடங்கள் மற்றும் சம்பளம்:

மொத்தம் 5 காலி பணியிடங்கள் உள்ளன.  மேலும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.15,700 யிலிருந்து ரூ.58,100 வரை வழங்கப்படும். எஸ்சி பிரிவை சேர்ந்தவருக்கு முன்னிரிமை கொடுக்கப்படும். 

முக்கிய குறிப்பு: 

இந்த பணியிடங்களுக்கான நியமனத்திற்கான நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் ஒன்றி ரத்து செய்யவோ தமிழ்நாடு தகவல் ஆணைய செயலாளர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios