தேர்வர்களுக்கு குட் நியூஸ்; டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கு இன்றும் விண்ணப்பிக்கலாம்
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடிங்கியதன் விளைவாக தேர்வர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024ம் ஆண்டில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் 507 காலி பணியிடங்களும், மேலும் உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப் 2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல் நிலைத் தேர்வுகள் வருகின்ற செப்டம்பர் மாதம் 14ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு்ளளது.
மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாரம் வெள்ளிக் கிழமை (19/07) உடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வர்கள் விண்ணப்பப்பிதற்கும், பணம் செலுத்துவதற்கும் முடியாமல் அவதி அடைந்தனர்.
Suicide: தீராத கடன் தொல்லை; கிருஷ்ணகிரியில் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை
தேர்வர்களின் நிலையை அறிந்த தேர்வாணையம் விண்ணப்பிப்பதற்கு கூடுதலாக 1 நாள் அவகாசம் வழங்கி உள்ளது. அதன்படி சனிக்கிழமையான இன்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.