வேளாண் துறையில் வேலைக்கு ரெடியா? டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இப்பவே விண்ணப்பிக்கலாம்!

மொத்தம் 263 காலி இடங்கள் இருக்கின்றன. உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கு 84 காலியிடங்களும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 179 காலியிடங்களும் உள்ளன.

TNPSC Assistant Agricultural Officer recruitment 2023 apply online sgb

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில் உதவி வேளாண்மை அலுவலர் (Assistant Agricultural Officer) காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிஎன்பிஎஸ்சி சார்பில் இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி, தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 263 காலி இடங்கள் இருக்கின்றன. உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கு 84 காலியிடங்களும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 179 காலியிடங்களும் உள்ளன.

சைலென்ட்டா ரிலீஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A15 ஸ்மார்ட்போன்! அப்படி என்ன சீக்ரெட் இருக்கு?

TNPSC Assistant Agricultural Officer recruitment 2023 apply online sgb

உதவி வேளாண்மை அலுவலர்:

இந்த வேலையில் சேர்பவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை கிடைக்கும். குறைந்தபட்சம் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டு வேளாண் பட்டயப் படிப்பு முடித்தவராகவும் இருப்பது அவசியம்.

உதவி தோட்டக்கலை அலுவலர்:

இந்த வேலையில் சேர்பவர்களுக்கும் மாத ஊதியம் ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை கிடைக்கும். குறைந்தபட்சம் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்பு முடித்தவராகவும் இருப்பது அவசியம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்ய விரும்புகிறவர்கள் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயது பூர்த்தியானவராக இருக்கக் கூடாது. தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டு விதிகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இணையம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் மூலச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2023

பக்கா பேட்டரி... பவர்ஃபுல் பிராசஸர்... ரெனோ 11 சீரீஸ் மொபைல்களை களமிறக்கிய ஓப்போ!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios