Asianet News TamilAsianet News Tamil

ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளர் வேலை! 50 ஆயிரம் சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியாகியுள்ளது.

Thoothukudi Rural Development Department Karungulam Panchayat Union Office Assistant, Night Watchman Recruitment
Author
First Published Apr 6, 2023, 3:31 PM IST | Last Updated Apr 6, 2023, 3:31 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. கருங்குளம் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுலவகத்தில் வேலை பார்ப்பதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் ஆகிய பணிகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அலுவலக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சைக்கிள் ஓட்டத்  தெரிந்திருப்பது கட்டயாம். இரவுக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருந்தாலே போதும். வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் 01.07.2022 அன்று 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

அலுவலக உதவியாளார் பணிக்குத் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ.50,000 வரை மாத ஊதியம் கிடைக்கும். அரசாணைப்படி அனுமதிக்கப்பட்ட படிகளும் கூடுதலாகக் கிடைக்கும். இரவுக்காவலர் வேலைக்கு தேர்வாகிறவர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த வேலைவாய்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி கொடுக்கப்படவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று உள்ளிட்ட தேவையான ஆதாரங்களை இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். சொந்த முகவரி எழுதி ரூ.25 க்கான அஞ்சல்தலை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1(104 inches postal cover) இணைத்து அனுப்ப வேண்டும்.

இரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அரசு விதிகளின்படி இனசுழற்சி முறைப்படி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நேர்காணல் குறித்த விபரம் தனியே அஞ்சலில் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய முகவரி:

ஆணையாளர்,
ஊராடி ஒன்றியம்,
கருங்குளம் - 628 809
தூத்துக்குடி மாவட்டம்,
தொலைப்பேசி எண்- 04630- 263235

முழுமையாக பூரத்தி செய்த விண்ணப்பங்களை 24.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட அலுவலக முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அல்லது நேரில் வந்தும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்துகாணலாம். அல்லது தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை கிளிக் செய்து வேலைவாய்ப்பு அறிவிப்பை  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Thoothukudi Rural Development Department - Karungulam Panchayat Union - Office Assistant, Night Watchman Recruitment Application Form

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios