தமிழ்நாடு 2023: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியானது. அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கல்லூரி சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பல்வேறு தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தொடங்கிவிட்டன. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கடந்த 8ஆம் தேதி முதல் துவங்கியது. அதேபோல், பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கை நடைமுறைகளும் கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கை:
தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளங்கலைப் படிப்புகளில் 1,73905 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19ஆம் தேதி வரை http://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் நடைபெற்றது. மேலும் இணைய வழியில் மூலம் விண்ணப்பிக்க மே 19 ஆம் தேதி கடைசியாக இருந்தது. ஆனால் தற்போது விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 500 சந்தேகங்கள்! 1000 மர்மங்கள்! 2000 பிழைகள்! இதை மறைக்கவே இந்த நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.!
கலந்தாய்வு:
மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.அதன்பின், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான சேர்க்கை மற்றும் கல்லூரி அளவிலான கவுன்சிலிங் மே 25 தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை நடைபெறும்.