தமிழக அரசு 2299 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. SSLC தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கிராம உதவியாளர் காலிப்பணியிடம் நிரப்ப உத்தரவு : தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகளில் ஏராளமான காலிப்பணியிடம் உள்ளது. அந்த வகையில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவாமல் உள்ளது. இந்த பணியிடங்கள் நிரப்ப பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட 2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிராம உதவியாளர்கள் தேர்வுமுறை மற்றும் பணிநியமனத்தின் போது மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அரசு ஆணையிட்டுள்ளது.
பணி நியமனத்திற்கான மதிப்பெண்கள் விவரம்
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். SSLC மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SSLC சான்றிதழ் வைத்திருந்தால் விண்ணப்பதாரர்களுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படும்.
மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டத் திறன் - 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசித்தும் எழுதத் தெரிதல் - 30 மதிப்பெண் : தமிழ் வாசிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வசிப்பிடம்: 35 மதிப்பெண்கள், சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் - குறைந்தது சம்பந்தப்பட்ட தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும்.
நேர்காணல்: 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல்களை நடத்துவார்கள்.
கிராம உதவியாளர் மொத்த காலிப்பணியிடங்கள்: 2,299
பணியின் தன்மை: கிராம நிர்வாக அலுவலர்களின் கீழ் பணியாற்றுதல், கிராம அளவிலான நிர்வாக பணிகளை மேற்கொள்ளுதல்.
தகுதி:
சம்பளம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை (மாதாந்திர அடிப்படையில்).
பதவி உயர்வு: 10 ஆண்டுகளுக்குப் பின் கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு.
முன்னுரிமை: பெற்றோரை இழந்தோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தேர்வு முறை: திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படும்.
