Asianet News TamilAsianet News Tamil

போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனி இலவசமா கோச்சிங் கிளாஸ்ல சேரலாம்.. முழு விபரம் இதோ.!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) Combined Graduate Level தேர்விற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது.

staff selection commission free coaching class announcement
Author
First Published Sep 14, 2022, 8:34 PM IST

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

staff selection commission free coaching class announcement

மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) Combined Graduate Level தேர்விற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் Combined Graduate Level தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 21.09.2022 அன்று தொடங்கப்படவுள்ளது.

இத்தேர்விற்கான கல்வி தகுதியாக "ஏதாவது ஒரு பட்டப்படிப்பு (Any Degree) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பாடத்திட்டத்தின் படி General Intelligence & Reasoning, General Awareness, Numerical Aptitude, English Comprehension ஆகியவற்றிற்கான வகுப்புகளும், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. 

மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு

staff selection commission free coaching class announcement

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸப் (Whatsapp) எண்ணிற்கு தங்களது பெயர், கல்வித்தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி தங்களின் பெயரினை பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள் அறிய மற்றும் இப்பயிற்சி வகுப்பிற்கு தங்களை பதிவு செய்து கொள்ள 9597557913 என்ற Whatsapp எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!

Follow Us:
Download App:
  • android
  • ios