பணியாளர் தேர்வு ஆணையம் SSC கான்ஸ்டபிள் GD தேர்வுக்கான முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) GD கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளது. 

எஸ்எஸ்சி ஜிடி (SSC GD) கான்ஸ்டபிள் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, SSC GD கான்ஸ்டபிள் முடிவை மார்ச் இறுதிக்குள் வெளியிடும். இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

SSC GD கான்ஸ்டபிள் கணினி அடிப்படையிலான தேர்வில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் PET (உடல் திறன் சோதனை), PST (உடல் தரநிலை சோதனை), DME (விரிவான மருத்துவ பரிசோதனை) மற்றும் RME (மதிப்பாய்வு) உள்ளிட்டவை நடத்தப்படும். SSC GD கான்ஸ்டபிள் 2022 தேர்வானது 2023 ஜனவரி 10 முதல் பிப்ரவரி 14 வரை கணினி அடிப்படையிலான சோதனை முறையில் ஆணையத்தால் நடத்தப்பட்டது. 

தற்காலிக விடைக்குறிப்பு பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் 25 பிப்ரவரி 2023 வரை ஆட்சேபனை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். SSC GD கான்ஸ்டபிள் தேர்வின் இறுதிச் சுற்றில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள், CAPFகள், NIA, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸில் ரைபிள்மேன் (GD) உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது? : 

1.அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in ஐப் பார்வையிடவும்.

2.முகப்புப் பக்கத்தில், முடிவுகள் பகுதிக்குச் செல்லவும்.

3.SSC GD Constable Result 2023க்கான நேரடி இணைப்பைத் தேடி கிளிக் செய்யவும்.

4.ஒரு PDF கோப்பு திரையில் காண்பிக்கப்படும்.

5.உங்கள் பெயர் மற்றும் ரோல் எண்ணுடன் முடிவை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்