கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை.. SSC மூலம் நிரப்படப்படவுள்ள 73 ஆயிரம் இடங்கள்.. விவரம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இந்தாண்டு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படவுள்ளன. டெல்லி காவல்துறையில் காலியாக Multi Tasking Staff பணியிடங்களுக்கு இதுவரை 39.33 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளர். இதில் 35 சதவீதத்தினர் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள். 
 

SSC 73,000 vacancy to fill over posts this year

எஸ்.எஸ்.சியின் தலைவர் கெளதம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தாண்டில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவுள்ளன. பெரும்பாலும் சி மற்றும் டி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்படவுள்ளன.

மேலும் எந்தெந்த துறைகளில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அதனால் தற்காலிகமாக தெரிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை குறையவோ அல்லது கூடவோ வாய்ப்புள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:எஸ்.எஸ்.சி போட்டி தேர்வு.. காலியாக உள்ள 20,000 பணியிடங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..

அதன்படி தற்போதைய தகவலின் அடிப்படையில், அதிகபட்சமாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் 28,825 காலி பணியிடங்கள் காலியாக உள்ளன. டெல்லி காவல்துறையில் 7,550 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 4,682 Multi Tasking Staff இடங்கள் Combined Higher Secondary Level (CHSL) தேர்வு மூலம் நிரப்படவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. 

அதேபோல் அசாம் ரைப்பிள்ஸ் மற்றும் சிறப்பு காவல் படையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மத்திய ஆயுத காவல்படை பிரிவில் காலியாக உள்ள 4330 உதவி ஆய்வாளர் இடங்களுக்கு நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

மேலும் படிக்க:எஸ்.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.! வெளியானது சூப்பர் அறிவிப்பு

மத்திய அரசின் பாதுகாப்பு பிரிவுகளில் காலியாக 24,605 காவலர் பணியிடங்களும் டெல்லி காவல்துறையில் காலியாக 6433 பணியிடங்களும் உள்ளன. ஒருங்கிணைந்த முதுகலை ஆசிரியர் (CHSL) பதவியில் 2960 பணியிடங்கள் காலியாக உள்ளன. Combined Graduate Level போட்டித்தேர்வு மூலம் 20,814 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

டெல்லி காவல்துறையில் காலியாக Multi Tasking Staff பணியிடங்களுக்கு இதுவரை 39.33 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளர். இதில் 35 சதவீதத்தினர் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள். அதேபோல் காவலர் பணியிடங்களுக்கு 71.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கினர் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios