Asianet News TamilAsianet News Tamil

சமூகநலத்துறையில் வேலை! தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்! விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் மூத்த ஆலோசகர், ஆலோசகர், திட்ட மேலாண்மை உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Social Welfare Senior consultant Notification 2023 apply now
Author
First Published Apr 8, 2023, 12:22 PM IST

தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மூத்த ஆலோசகர், ஆலோசகர், திட்ட மேலாண்மை உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பணியிடங்களுக்கு, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மூத்த ஆலோசகர் (Senior Consultant)

மூத்த ஆலோசகர் (Senior Consultant) பணிக்கு ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளார். மாதம் ரூ.1,25,000 ஊதியம் வழங்கப்படும். பொது நிர்வாகம், சமூக அறிவியில், வணிக மேலாண்மை போன்ற படிப்புகளில் ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பதும் அவசியம்.

ஒரே ஆண்டில் மொபைல் தயாரிப்பு துறையில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்!

ஆலோசகர் (Consultant)

ஆலோசகர் (Consultant) பணிக்கு 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.75,000 சம்பளம் கொடுக்கப்படும். பொது நிர்வாகம், சமூக அறிவியில், வணிக மேலாண்மை போன்ற படிப்புகளில் ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பதும் அவசியம்.

திட்ட மேலாண்மை உதவியாளர் (Project Management Assistant)

திட்ட மேலாண்மை உதவியாளர் (Project Management Assistant) பணிக்கு 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.30,000 சம்பளம் கொடுக்கப்படும். பொது நிர்வாகம், சமூக அறிவியில், வணிக மேலாண்மை போன்ற படிப்புகளில் ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பதும் அவசியம்.

Social Welfare Senior consultant Notification 2023 apply now

கணினி இயக்குபவர் (Data Entry  Operator) பணிக்கு 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.15,000 சம்பளம் கொடுக்கப்படும். ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓர் ஆண்டு பணி அனுபவமும் அவசியம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி சமூகநலத்துறை இயக்குநரக முகவரிக்கு அனுப்பவேண்டும்.

http://cms.tn.gov.in/sites/default/files/announcement/PMU_sect_recruitment_230323.pdf

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:

The Director,

Directorate of Social Welfare,

2nd Floor, Panagal Maligai,

Saidapet,

Chennai-600015.

Follow Us:
Download App:
  • android
  • ios