எஸ்பிஐ வங்கியில் 1,673 காலி பணியிடங்கள்.. ஆரம்ப சம்பளம் ரூ.40,000.. தேர்வு தேதி அறிவிப்பு..

SBI வங்கியானது காலியாக உள்ள 1,673 ப்ரோபேஷனரி ஆபீசர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 

SBI Recruitment notification 2022 for probationary officer posts

நிறுவனத்தின் பெயர்:  எஸ்பிஐ

காலி பணியிடங்கள்: 1,673 

பணியின் பெயர்: ப்ரோபேஷனரி ஆபீசர் 

பணியின் விவரம்: 

பொது பிரிவினர் - 648 இடங்கள் 

ஓபிசி பிரிவினர் - 464 

இடபுள்யூசி பிரிவினர் - 160 

எஸ்.சி பிரிவினர் - 270 

எஸ்.டி பிரிவினர் - 131 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இன்று முதல் அக்.12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்கும் போது கட்டணமும் செலுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.750 யை செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 

மேலும் படிக்க:TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 .. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இங்கே

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 21 - 30 க்குள் இருக்க வேண்டும்.  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு  வயது வரம்பிலிருந்து 5 ஆண்டு வரையும் இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரையும் வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை அளிக்கப்படும்.

கல்வி தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது  மத்திய அரசு அங்கீகரித்த அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு: 

நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்வு முந்தைய பயிற்சி வழங்கப்படும். மேலும் டிசம்பர் முதல் மற்றும் 2 வது வாரத்தில் ஆன்லைன் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்படும். அதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

முதல் நிலை, முதன்மை ,திறனறிவு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

முதல்நிலை எழுத்துத் தேர்வு டிசம்பர் 17,18,19,20 ஆகிய தேதிகளில் கணினி வழியில் நடத்தப்படும். அதே போல் முதன்மை எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.

இதில் தேர்வானவர்களுக்கு பிப்ரவரி அல்லது மார்சில் திறனறிவு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மார்ச் மாத இறுதியில் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 

தளர்வுகள்: 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ப்ரோபேஷனரி ஆபீசர் பதவிக்கு பொதுபிரிவினரில் 4 முறை முதன்மைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது.

ஆனால் பொதுப் பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகள், ஓபிசி வகுப்பினர், ஓபிசி வகுப்பினரில் உள்ள மாற்றுத் திறனாளிகள்,பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 7 முறை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் அதிகபட்ச வயது வரம்பிற்கு உட்படு எத்தனை முறை வேண்டுமானும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.  18.04.2010 அன்று  நடைபெற்ற தேர்வில் இருந்து இந்த எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:TNPL தமிழ்நாடு நிறுவனத்தில் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. விவரம் உள்ளே

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios