இந்தத் தேர்வை எழுத இலவச பயிற்சியும் வழங்கப்படுகிறது. இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்பினால் அதை விண்ணப்பப் படிவத்தில் அதனைக் குறிப்பிடலாம்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 8,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வாடிக்கையாளர் சேவை / விற்பனை பிரிவுகளில் கிளார்க் / ஜூனியர் அசோசியேட் பணிகளுக்கு 8283 காலியிடங்கள் உள்ளன. இதில் ஜூனியர் அசோசியேட் பணிக்கு விண்ணபிக்க ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதும். சென்னை மற்றும் புதுச்சேரியில் மட்டும் 175 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு:

இந்த வேலைக்கு விண்ணபிக்கும் நபர்களின் வயது 20-28 க்குள் இருக்க வேண்டும். பட்டியலின / பழங்குடியினப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. பிற்ப்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்:

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் பணி நியமனம் பெறுபவர்களுக்கு ரூ.17,900 முதல் ரூ.47,920 வரை மாத ஊதியம் வழங்கப்பபடும்.

தேர்வு முறை:

இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வு இரண்டுமே ஆன்லைனிலேயே நடைபெறும். 2024ஆம் ஆண்டு ஜனவரியில் ஆன்லைனில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

எஸ்சி / எஸ்டி/ மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பொது / பிற்படுத்தப்பட்ட / பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750.

இடஒதுக்கீடுக்கு உரிய பிரிவினருக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படுகிறது. இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்பினால் அதை விண்ணப்பப் படிவத்தில் அதனைக் குறிப்பிடலாம்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 07-12-2023

இந்த வேலைவாய்ப்பு பற்றி மேலும் விவரங்கள் அறிய https://bank.sbi/web/careers/current-openings என்ற அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D