இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் தகுதி..? விவரம் உள்ளே

இந்திய உணவுக் கழகம் உதவியாளர், இளநிலை பொறியியாளர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 5,043 இடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் 6 (தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு) மண்டலங்களில் இந்த ஆள் சேர்க்கை நடைபெறவுள்ளது. 
 

Recruitment notification for 5,043 vacancies in Food Corporation of India..

நிறுவனத்தின் பெயர்: இந்திய உணவுக் கழகம் 

மொத்த காலி பணியிடங்கள்: 5,043

பணியிடங்களின் விவரம்: 

டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டத்தில் 2388 காலியிடங்கள் உள்ளன. 

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டத்தில் 989 காலியிடங்கள் உள்ளன.

பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்தில் 768 காலியிடங்கள் உள்ளன.

குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் 713 காலியிடங்கள் உள்ளன.

அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு மண்டலத்தில் 185 காலியிடங்கள் உள்ளன.

பதவிகளின் விவரம்: 

இளநிலை பொறியியாளர் சிவில் (A), எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் (B); சுருக்கெழுத்தாளர் நிலை- 2 (C); உதவியாளர்  நிலை III - பொது (D); உதவியாளர் நிலை III- கணக்கு (E); உதவியாளர் நிலை III - டெக்கினிக்கல் (F);  உதவியாளர் நிலை III- உணவு தானிய கிடங்குகள்  (G);  உதவியாளர் நிலை III (இந்தி) - H ஆகிய பதவிகளில் காலி உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\

மேலும் படிக்க:யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி ..? முழு விவரம்

விண்ணப்பிக்கும் தேதி: 

இந்த மாதம் 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம்: 

இந்த பணிக்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்  விண்ணப்பிக்க கட்டணம்  செலுத்தவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு: 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு காலிப்பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு:

இளநிலை பொறியியாளர் - வயது 28-க்கு கீழ் இருக்க வேண்டும். 

சுருக்கெழுத்தாளர் - வயது 25-க்கு கீழ் இருக்க வேண்டும். 

உதவியாளர் நிலை-III-  வயது 27-க்கு கீழ் இருக்க வேண்டும். 

எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை 

ஓபிசி பிரிவினருக்கு மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை 

நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை

மேலும் படிக்க:தேர்வர்கள் கவனத்திற்கு!! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.. முக்கிய அறிவிப்பு

கல்வித் தகுதி: 

சுருக்கெழுத்தாளர் மற்றும் உதவியாளர் நிலை- III பொது & உணவுத் தானிய கிடங்குகள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

இதர பதவிகளுக்கு பணிக்கு தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

இரண்டு கட்டங்களாக நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். தேர்வு நடைபெறும் நாள் குறித்து அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios