ரயில்வே துறையில் 790 காலியிடங்கள்.. மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்
தெற்கு ரயில்வே காலியாகவுள்ள 790 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனைப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வோம்.
தெற்கு ரயில்வேயில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட், ஜூனியர் இன்ஜினியர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sr.indianrailways.gov.in இல் ஆன்லைன் படிவத்தை சமர்ப்பிக்கலாம். தெற்கு ரயில்வே 790 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் வேலை தேடுபவர்கள் செல்லுபடியாகும் 12th, B.Sc, Diploma, Graduate, ITI சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம் : உதவி லோகோ பைலட், ஜூனியர் இன்ஜினியர்
மொத்த பணியிடங்கள் : 790
கடைசி தேதி : 30 ஆகஸ்ட் 2023
விண்ணப்ப முறை : ஆன்லைன்
வேலை இடம் : இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி
அசிஸ்டெண்ட் லோகோ பைலட், ஜூனியர் இன்ஜினியர் விண்ணப்பதாரர்கள் 12வது சான்றிதழ்/பட்டம், பி.எஸ்சி, டிப்ளமோ, பட்டதாரி, ஐடிஐ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது எல்லை
விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் ஆகும். 01 ஜனவரி 2024 தேதியின்படி கணக்கிடப்படும். விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 42 ஆண்டுகள் ஆகும்.
சம்பளம்
தெற்கு ரயில்வே அசிஸ்டெண்ட் லோகோ பைலட், ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என்றும், அது தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!