Asianet News TamilAsianet News Tamil

மாதம் ரூ.44,900 சம்பளம்! 1,376 காலி பணியிடங்கள்! ரயில்வே பாராமெடிக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

இந்திய ரயில்வேயில் 20 விதமான வேலைகளுக்கு மொத்தம் 1,376 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரயில்வே தேர்வு வாரியம் இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்தவுள்ளது.

Railway Paramedical Recruitment 2024: Notification Out For 1,376 Posts, Check Details sgb
Author
First Published Aug 10, 2024, 9:05 PM IST | Last Updated Aug 10, 2024, 9:11 PM IST

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) பாராமெடிக்கல் பிரிவுகளில் பல்வேறு பணியிடங்களில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 16ஆம் தேதி விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடையும்.

காலிப் பணியிடங்கள்:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பில் 20 விதமான வேலைகளுக்கு மொத்தம் 1,376 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி, வயதுவரம்பு:

வெவ்வேறு பணிகளுக்கு உரிய கல்வித்தகுதியும், வயது வரம்பும் மாறுபடுகிறது. 18 முதல் 43 வயது வரை உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. மேலும், அரசு விதிகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களுக்கு வயது வரம்பு தளர்வும் உண்டு.

சம்பளமே இல்லாமல் வேலை செய்யும் அம்பானி! செலவுகளை எப்படி நிர்வகிக்கிறார் தெரியுமா?

சம்பளம்:

ஒவ்வொரு பணியின் தன்மைக்கும் ஏற்ப ஊதியம் வழங்கப்படும். குறைந்தபட்சமாக  களப்பணியாளர் வேலைக்கு ரூ.19,900 சம்பளம் கிடைக்கும். அதிகபட்சமாக நர்சிங் கண்காணிப்பாளர் பணிக்கு ரூ.44,900 மாதச் சம்பளம் கிடைக்கும்.

தேர்வு முறை:

பாராமெடிக்கல் பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புக்கு கணினித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். அதே சமயம் எஸ்சி/எஸ்டி/ உடல் ஊனமுற்றோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்திய ரயில்வேயில் https://indianrailways.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிய ஆர்.ஆர்.பி. வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைப்ப பார்க்கவும்.

பெண்களுக்கு மட்டும் இந்த சூப்பர் திட்டம்! வெறும் 1000 டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios