அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு.. தமிழகத்தில் நீங்கள் விரும்பிய இடத்தில் பணி செய்யலாம் - முழு விவரம்!
இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் உள்ள சுமார் 30,000 காலி பணிகளுக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் வரவேற்கிறது. அது குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பணி விவரம்
இந்திய தபால் துறையில் Gramin Dak Sevaksன் கீழ் BPM (Branch Post Master)மற்றும் ABPM (Assistant Branch Post Master) பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சம்பளம்
BPM பணிக்கு ரூபாய் 12,000 முதல் 29,380 வரை
ABPM பணிக்கு ரூபாய் 10,000 முதல் 24,470 வரை
விண்ணப்பிக்கும் முறை
indiapostgdsonline.gov.in என்ற இந்த இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
கடந்த 03.08.2023 அன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் நாளை 23.08.2023 வரை மட்டுமே விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்ற முடியும்.
திருத்தம் செய்ய கால அவகாசம்
24.08.2023ம் தேதி துவங்கி 26.08.2023 வரை பதிவேற்றிய விண்ணப்பங்களில் திருத்தும் செய்துகொள்ள முடியும்.
வயது வரம்பு
18 முதல் 40 வரை, மேலும் வகுப்பு வாரியாக 5 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf இந்த படிவத்தை பார்க்கவும்.
கல்வி தகுதி மற்றும் பிற தகுதிகள்
10ம் வகுப்பு (ஆங்கிலம் மற்றும் கணிதம் கண்டிப்பாக ஒரு படமாக படித்திருக்க வேண்டும்)
கணினி பயன்படுத்த தெரியவேண்டும், சைக்கிள் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்!
- 2023 Application Fee
- Apply for Post Office Recruitment 2023
- India Post Office
- India Post Office Recruitment
- Notification 2023
- Post Office
- Post Office GDS Recruitment 2023
- Post Office GDS Recruitment 2023 Online Form
- Post Office GDS Vacancy 2023
- Post Office Recruitment 2023
- Post Office Recruitment 2023 Eligibility
- Post Office Recruitment 2023 Selection Criteria
- Recruitment 2023 Salary