பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணி.. மாத சம்பளம் 2 லட்சம்.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்..
நாட்டில் உள்ள பல்வேறு பாஸ்போர்ட் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பாஸ்போர்ட் அமைப்பு, இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அலுவலகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு பாஸ்போர்ட் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பாஸ்போர்ட் அமைப்பு, இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அலுவலகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 24 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க:அனைவருக்கும் வீடு திட்டம்.. உடனே விண்ணப்பிக்கலாம்.. முந்துங்க மக்களே!
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு 56 ஐ கடந்து இருக்க கூடாது. Passport Officer மற்றும் Assistant Passport Officer பதவிகள் தற்போது நிரப்பப்படுகின்றன. நாடு முழுவதும் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
மேலும் படிக்க:TNPSC : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. போட்டித் தேர்வர்களே உஷார் !
இந்த பணியிடங்களுக்கு, விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். Passport Officer பணியிடத்திற்கு ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். அதே போல், Assistant Passport Officer பதவியிடத்திற்கு ரூ.67,700 முதல் ரூ.2,08, 700 வரை வழங்கப்படும். எனவே இந்த பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.