எலான் மஸ்க் வெளியேற்றிய பராக் அகர்வால் இன்று ரூ. 249 கோடி மதிப்பிலான AI நிறுவனத்துக்கு சொந்தக்காரர்!!

அன்று டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பராக் அகர்வால் இன்று செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஆகிறார். 

Parag Agarwal received Rs. 249 Crore for his AI startup company

ஐஐடியில் படிப்பவர்களை எப்போதும் பெரிய நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுத்து கொத்திச் செல்வது வாடிக்கை. அப்படி ஆண்டுக்கு ரூ. 100 சம்பளத்திற்கு கொத்திச் செல்லப்பட்ட இளைஞர் தான் பராக் அகர்வால். ஆனால், பணிக்கு சேர்ந்த ஓராண்டில் வேலையை இழந்தார்.  இப்படி வேலையை இழந்தாலும் சிலருக்கு உடனடியாக வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும். சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்காது. அந்த வகையில் பாரக் அகர்வால் துவங்க இருக்கும் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு ரூ. 249 கோடி முதலீடு கிடைத்துள்ளது.

பராக் அகர்வால் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியமர்த்தப்பட்டபோது அதை தலைப்புச் செய்திகளில் வெளியிட்டனர். உலகம் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்தார். ஐஐடி மும்பையில் படித்தவர் பராக் அகர்வால்.  இவருக்கு அப்போதைய சம்பளம் பங்குகள் உள்பட ரூ. 94 கோடியாக இருந்தது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். 

வேலைக்கு சேரும் போதே ரூ.100 கோடி சம்பளம்.. ஐஐடி பட்டதாரின்னா சும்மாவா! இவர் யாருன்னு தெரியுமா?

பராக் அகர்வாலின் இரண்டாவது இன்னிங்க்ஸ் தற்போது OpenAI நிறுவனத்தின் ChatGPT மற்றும் BARD ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கப் போகிறது. அதாவது மொழி மாதிரி மென்பொருளை தயாரிக்க இருக்கிறார். OpenAI நிறுவனத்துக்கு துவக்கத்தில் ஆதரவாக இருந்த  வினோத் கோஸ்லா தலைமையிலான கோஸ்லா வென்ச்சர்ஸ் தான் தற்போதும் அகர்வாலின் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கிறது. இது தவிர, இன்டெக்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் ரவுண்ட் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்பதாக கூறப்படுகிறது.

அஜ்மீரில் பிறந்த பராக் அகர்வால் நன்கு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இந்திய அணுசக்தித் துறையில் மூத்த அதிகாரியாகவும், தாயார் ஓய்வு பெற்ற பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்தவர்கள். அகர்வால் தனது பட்டப்படிப்பை 2005-ல், ஐஐடி மும்பையில் முடித்தார். அகில இந்திய தரவரிசையில் (AIR) 77வது இடத்தைப் பிடித்து இருந்தார். பின்னர் அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 

Elon Musk Twitter: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்: பராக் அகர்வால், விஜயா கடே நீக்கி அதிரடி

நிறுவனத்திற்கு தேவையான உறுதியும் கவர்ச்சியும் அகர்வாலிடம் இல்லை என்று எலான் மஸ்க் உணர்ந்ததாகக் கூறப்பட்டது. இவர்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் வெளிப்படையாகவே உரசல்களை ஏற்படுத்தின. ட்விட்டர் நிறுவனத்தை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றே எலான் இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இன்று சொந்தமாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவக்கும் நிலைக்கு பராக் அகர்வால் சென்று இருப்பது பாராட்டுக்குரியதே. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios