நெய்வேலி NLC இந்தியா லிமிடெட், 575 பட்டதாரி மற்றும் டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரு வருட பயிற்சி காலத்திற்கு, பட்டதாரி அப்ரெண்டிஸ்களுக்கு ரூ.15,028 ஊதியம் வழங்கப்படும். 

செம சான்ஸ் சம்பளத்துடன் பயிற்சி

நெய்வேலி NLC India Limited நிறுவனம்,575 Graduate Apprentice மற்றும் Technician Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த Apprentice பயிற்சி காலம் ஒரு ஆண்டு ஆகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 19.12.2025 காலை 10.00 மணி முதல் 02.01.2026 மாலை 5.00 மணி வரை அதிகாரப்பூர்வ இணையதளம் www.nlcindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அறிவிப்பை முழுமையாக படித்து தகுதி நிபந்தனைகளை சரிபார்ப்பது அவசியம்.

கல்வி தகுதி

இந்த ஆட்சேர்ப்பில் Graduate Apprentice பணிகளுக்கு Mechanical, Electrical, Civil, Instrumentation, Chemical, Mining, Computer Science, ECE, IT போன்ற இன்ஜினியரிங் பிரிவுகளில் மொத்தம் பல பணியிடங்கள் உள்ளன. அதேபோல் Technician Apprentice பணிகளுக்கு Mechanical, Electrical, Civil, Instrumentation, Mining, CSE, ECE உள்ளிட்ட பிரிவுகளுடன் Medical Lab Technology, Catering Technology & Hotel Management, Pharmacist போன்ற டிப்ளோமா தகுதி பணிகளும் இடம்பெற்றுள்ளன. பணியிடம் முழுவதும் நெய்வேலி ஆகும்.

Graduate Apprentice பதவிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முழுநேர இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Technician Apprentice பதவிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முழுநேர டிப்ளோமா தகுதி அவசியம். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2021 முதல் 2025 வரை தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு Apprenticeship விதிமுறைகளின் படி பின்பற்றப்படும்.

ஊதியம்

ஊதியமாக Graduate Apprentice – ரூ.15,028/- மற்றும் Technician Apprentice – ரூ.12,524/- வழங்கப்படும். தேர்வு முறை மெரிட் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தின் கையொப்பமிட்ட பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சுயசான்றிதழ் நகல்களுடன் 09.01.2026 மாலை 5.00 மணிக்குள் Learning and Development Centre, NLC India Limited, Neyveli என்ற முகவரிக்கு நேரடியாக அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்

 ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் – 19.12.2025; கடைசி தேதி – 02.01.2026; ஹார்ட்காப்பி பெறும் கடைசி தேதி – 09.01.2026; சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டோர் பட்டியல் – 17.01.2026; சான்றிதழ் சரிபார்ப்பு – 21.01.2026 முதல் 23.01.2026; தற்காலிக தேர்வு பட்டியல் – 04.02.2026; பயிற்சியில் சேரும் தேதி – Graduate Apprentice: 10.02.2026, Technician Apprentice: 16.02.2026. NLC Recruitment 2026 குறித்த அனைத்து புதுப்பிப்புகளுக்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுவது அவசியம்.