Madras University Exams Postponed: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.. புதிய தேர்வு தேதிகள் எப்போது?
நேற்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் மாலை முதல் இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் மாலை முதல் இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இன்று காலை முதல் ஆலந்தூர், கிண்டி, அடையாறு, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க;- ஒரு நாள் மழையில் திக்கு முக்காடி திணறிக்கொண்டிருக்கும் சென்னை! வயிறெரிந்து சாபம் விடும் மக்கள்! பாஜக விளாசல்!
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வேறு எந்த தேதியில் நடைபெறும் என்பதை குறித்து அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.