DRDO-வில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-ல் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-ல் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆயிரத்து 61 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த முழு விவரம்:
பதவிகள்:
- Junior Translation Officer
- Stenographer Grade-I(English)
- Stenographer Grade-II(English)
- Administrative Assistant(English/Hindi)
- Store Assistant 'A' (Hindi/English)
- Security Assistant 'A' (Hindi/English)
- Security Assistant 'A'
- Vehicle Operator'A'
- Fireman/Fire Engine Driver
1. Junior Translation Officer பணிக்கான விவரம்:
தகுதி:
- ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு:
- 30க்குள் இருக்க வேண்டும்.
2. Stenographer Grade-I(English) பணிக்கான விவரம்:
தகுதி:
- ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு:
- 30க்குள் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: தீவிரவாதத்தைவிட ஆபத்தானது என்ன? எந்த மதத்துடனும் தீவிரவாதத்தை தொடர்புபடுத்தக்கூடாது: அமித் ஷா கருத்து
3. Stenographer Grade-II(English) பணிக்கான விவரம்:
தகுதி:
- பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு:
- 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
4. Administrative Assistant(English/Hindi) பணிக்கான விவரம்:
தகுதி:
- பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- மாதம் ரூ.19,900 - 81,100
வயதுவரம்பு:
- 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
5. Store Assistant 'A' (Hindi/English) பணிக்கான விவரம்:
தகுதி:
- பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அடிக்கும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- மாதம் 19,900 - 63,200
வயதுவரம்பு:
- 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை அருணாச்சலப் பிரதேசம், உ.பி. பயணம்
6. Security Assistant 'A' பணிக்கான விவரம்:
தகுதி:
- பிளஸ் 2 தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு:
- 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
7. Vehicle Operator'A' பணிக்கான விவரம்:
தகுதி:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு:
- 27க்குள் இருக்க வேண்டும்.
8. Fireman/Fire Engine Driver பணிக்கான விவரம்:
தகுதி:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம், நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு:
- 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை செயல்படுத்தவில்லை: நிரூபித்தால் பதவி விலகுகிறேன்! கேரள ஆளுநர் சவால்
தேர்வு செய்யப்படும் முறை:
- DRDO-ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
முதல் கட்ட தேர்வு நடைபெறும் இடம்:
- தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர்
விண்ணப்பக் கட்டணம்:
- ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
- www.drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
- 7.12.2022