இந்தியன் ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இம்மாதமே கடைசி!
இந்தியன் ரிசர்வ் வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பலனடையலாம். காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இம்மாதமே கடைசி! மேலும் பல தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ரிசர்ச் (IGIDR)க்கான இயக்குனரை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி விவரங்கள்
பணி பெயர் ; Director on IGDIR
விண்ணப்பிக்க கடைசி தேதி ; 30. 6. 2022
கல்வித்தகுதி ; துறைசார்ந்து பிரிவில் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பத்து வருடம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு ; 30.06.2022 தேதியின்படி விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயது வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முறைப்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கீழ் காணும் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டி முகவரி
'IGIDR Search Committee 2022,C/o Corporate Strategy & Budget Department, Central Office,Reserve Bank of India,Main Building,2nd floor, ShahidBhagat Singh Marg,Mumbai 400001.' என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
RBI இணையதளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும். முகப்புப் பக்கத்தில் தற்போதைய காலியிடங்கள் > (Select Current Vacancies >) காலியிடங்களைத் தேர்ந்தெடுக்கவும். அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/IGIDR130620228CFC097AF4844B8ABD02455FE5ED22E3.PDF
அறிவிப்பில் விண்ணப்பப் படிவமும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்த பின்னர் அதில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4100