Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரி ஜிப்மரில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா..? முழு விவரம் இதோ

ஜிப்மரில்  காலியாக உள்ள Tutor in Speech Pathology & Audiology பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

jipmer recruitment 2022 notification full details
Author
Pondicherry, First Published Aug 4, 2022, 3:33 PM IST

ஜிப்மரில்  காலியாக உள்ள Tutor in Speech Pathology & Audiology பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் (Jawaharlal Institute of PostGraduate Medical Education & Research) மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என சுமார் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். 1872-ல் பிரெஞ்சு ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1964-ம் ஆண்டு ஜிப்மர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கல்லூரியில் பயில்கின்றனர்.

இங்கு காலியாக உள்ள Tutor in Speech Pathology & Audiology பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

அதிகாரப்பூர்வ வலைத்தளமான jipmer.edu.in-க்கு செல்லவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை முழுமையாக படிக்கவும். JIPMER Jobs Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும். அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள். எதிர்கால பயன்பாட்டிற்காக உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும். விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios