இந்தியன் வங்கி 1500 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புகிறது. தமிழ்நாட்டில் 277 இடங்கள் உள்ளன. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வங்கியில் பணி வாய்ப்பு.!

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தற்போது அப்ரண்டிஸ் பயிற்சி திட்டம் மூலம் 1500 காலியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது போன்ற வாய்ப்புகள் நாடு முழுவதும் பட்டம் பெற்ற இளைஞர்கள் பலருக்குப் புதிய பாதையைத் திறக்கும் வகையில் அமைந்துள்ளது.

வேலைவாய்ப்பு விவரம்.!

இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கு இந்த அப்ரண்டிஸ் பணியிடங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டுக்கு மட்டும் 277 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டம் பெற்ற அனைத்து இளைஞர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இது முழுக்க பயிற்சி அடிப்படையிலான பணியிடமாக இருக்கின்றது.

தகுதி மற்றும் வயது வரம்பு

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பது அவசியம். விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2025 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால், அரசு விதிப்படி, SC/ST க்கு 5 ஆண்டு, OBC க்கு 3 ஆண்டு, மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது தளர்வு வழங்கப்படுகிறது.

ஊக்கத்தொகை மற்றும் தேர்வு முறை

தேர்ந்தெடுக்கப்படும் அப்ரண்டிஸ் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். கணினி வழித் தேர்வு மூலம் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில்: பொது அறிவு, கணிதம் மற்றும் திறனறிவு, ஆங்கிலம், வங்கி மற்றும் கணினி அறிவு ஆகியவை அடங்கிய மொத்தம் 100 கேள்விகள், ஒவ்வொரு பகுதியும் 25 கேள்விகள் எனக் கேட்கப்படும். தேர்வு நேரம் 1 மணி நேரம். மதிப்பெண்கள் மொத்தம் 100.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனாக 07.08.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினர் – ரூ.800

எஸ்.சி / எஸ்.டி மற்றும் பெண்கள் – ரூ.175

மாற்றுத் திறனாளிகள் – ரூ.400

பட்டம் முடித்த இளைஞர்களுக்கு வங்கி துறையில் நல்ல பயிற்சி அனுபவம் மற்றும் வேலை வாய்ப்பு பெற இது சிறந்த வாய்ப்பாகும். நேரம் மிச்சமில்லை – உடனே விண்ணப்பியுங்கள்!