சொன்னா நம்ப மாட்டீங்க.. இன்டர்வியூவில் மாஸ் காட்டிய சென்னை ஐஐடி.. ரூ.1 கோடியே 98 லட்சம் வரை சம்பளம்.!
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக, ஒரே கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான பணிநியமனங்களை உருவாக்கியுள்ளது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக, ஒரே கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான பணிநியமனங்களை உருவாக்கியுள்ளது.
இங்கு 2021-22-ம் கல்வியாண்டில் இரண்டு கட்ட வளாக வேலைவாய்ப்புகள் மூலம் 380 நிறுவனங்களிடம் இருந்து 1,199 வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோடைக்கால உள்ளகப் பயிற்சியின் வாயிலாகக் கிடைத்த 231 முன்வேலைவாய்ப்புகளுடன் சேர்த்து மொத்தத்தில் 1,430 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. 2018-19-ம் கல்வியாண்டில் கிடைத்த 1,151 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும்.
இதில், 14 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும் அடங்கும். இந்த எண்ணிக்கையும் கூட சாதனை அளவாகும். தவிர, 131 புத்தாக்க நிறுவனங்கள் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட வளாக வேலைவாய்ப்பின் போது 199 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
நடப்பு சீசனில் 61 எம்.பி.ஏ. மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், சென்னை ஐஐடி-ன் மேலாண்மைக் கல்வித்துறை 100 சதவீதம் வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு தேர்வான மாணவர்களின் சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.21.48 லட்சமாகும். அப்படியெனில் மாதத்திற்கு ரூ.70 ஆயிரத்திற்கும் அதிகமாகும். இதுவே அதிகபட்ச ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.98 கோடி வரை வழங்கப்படுகிறது என ஐஐடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பதிவு செய்த மாணவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.