மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (VCRC) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (VCRC) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரி இந்திரா நகரில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் உதவியாளர் (Assistant), மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk), கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk) ஆகிய பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது.

என்னென்ன வேலைகள்? சம்பளம் எவ்ளோ?

  • உதவியாளர் (Assistant): குரூப்-பி (Group-B) பிரிவில் உள்ள இந்த பணிக்கு, 7-வது ஊதியக்குழுவின் படி, ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். மொத்தம் 2 பணியிடங்கள் உள்ளன.
  • மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk): குரூப்-சி (Group-C) பிரிவில் உள்ள இந்த பணிக்கு, 7-வது ஊதியக்குழுவின் படி, ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். மொத்தம் 1 பணியிடம் உள்ளது.
  • கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk): குரூப்-சி (Group-C) பிரிவில் உள்ள இந்த பணிக்கு, 7-வது ஊதியக்குழுவின் படி, ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். மொத்தம் 4 பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.vcrc.icmr.org.in மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளமான www.icmr.nic.in ஆகியவற்றை பார்வையிடலாம். ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இணைப்பு மற்றும் கடைசி தேதி விரைவில் இணையதளங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு: கல்வித் தகுதி, வயது வரம்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் போன்ற முழு விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், விளம்பரத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவை VCRC/ICMR இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும்.