அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவது எப்படி? விண்ணப்பம் முதல் கட்டணம் வரை - முழு விபரம்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023- ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வி தகுதி எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் - ரூ. 50, சேர்க்கை கட்டணம் ஆகும். ஒரு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் - ரூ. 185 ஆகும். இரண்டு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் - ரூ. 195 வசூலிக்கப்படுகின்றன.
சேர்க்கையின் போது மாணவர்கள், 8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஆதார் கார்டு, சாதிச்சான்றிதழ், போட்டோ – 3 ஆகியவைகளை எடுத்து வரவும். இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கைஜூலை 31ம் தேதி வரை வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு, அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மின்னஞ்சல் முகவரி gitiperambalur@gmail. com, 9499055881 மற்றும் 9499055852 என்ற எண்ணிலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், பெரம்பலூர். மின்னஞ்சல் முகவரி gitialathurperambalur@gmail. com, 9488451405 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் முதலீடு செய்தால் 10 லட்சம் கிடைக்கும்.. இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்