இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி? செஞ்சி மாணவர் பிரபஞ்சன் தகவல்..!

 நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்துள்ளனர். அதன்படி, தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

How did you get topper in NEET exam in India? pirapajan information

நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் தனது ஸ்வரஸ்ய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று நீட் இளங்கலை தேர்வு முடிவுகள் நேற்று இரவு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.44 லட்சம் பேரில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்துள்ளனர். அதன்படி, தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

How did you get topper in NEET exam in India? pirapajan information

இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூரை சேர்ந்தவர் பிரபஞ்சன். இவரது தந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரபஞ்சன்;- 10ம் வகுப்பு வரை செஞ்சி சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தாகவும், 12ம் வகுப்பு சிபிஎஸ்இ வேலம்மாளில் படித்ததாகவும் கூறினார். நீட் கோச்சிங் வேலம்மாள் ஸ்கூலிலேயே கொடுத்தாகவும் கூறினார். 2 ஆண்டுகள் கடுமையான உழைப்பால் இந்த மதிப்பெண் பெற்றேன் என்றார்.

How did you get topper in NEET exam in India? pirapajan information

தொடர் பயிற்சியும் வெற்றியை சாத்தியமாக்கியது. யாராலும் முடியாது என்பது கிடையாது. நீட் எளிதானது என கூற முடியாது. நீட் தேர்வு கடினமானது தான். தன்னம்பிக்கைதான் முதலில் தேவையானது என்று கூறினார்.  720-க்கு 720 பெறுவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை. கடவுள் ஆசீர்வாதம் இல்லாமல் இந்த மதிப்பெண் பெற்றிருக்க முடியாது. நான் ஸ்கூல் மேனேஜ்மென்ட் மற்றும் ஆசிரியர் சப்போர்ட் இருந்ததாகவும் கூறினார். எவ்வளவுக்கு எவ்வளவு படிச்சேனோ அவ்வளவு ஜாலியாவும் இருந்தேன். ஜாலியா புரிஞ்சு  படிச்சேன் என பிரபஞ்சன் தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios