10ம் வகுப்பு போதும்.. அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவராக அருமையான வாய்ப்பு - முழு விபரம்
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவராக அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுப்பற்றிய முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.
சென்னை மத்திய கோட்டத்தின், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை அஞ்சல் மத்திய கோட்டம் அலுவலகத்தில் ஜூன் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீட்டு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்கான தேர்வு நடைபெற உள்ளது.
இதில் பங்கு பெற குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல வயது 18லிருந்து 50 வயது வரை இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்கள், வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டலப் பணியாளர்கள், சுய உதவிக்குழு அமைப்பினர், முன்னாள் ராணுவத்தினருக்கு, ஓய்வு பெற்ற ஆசிரியைகள் விண்ணப்பிக்கலாம்.
ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் , சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சாா்ந்தவராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நேர்முக தோவில் கலந்துகொள்பவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல், வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகலாம்.
நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவா்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும். மேலும் முகவராக தேர்ந்தெடுக்கப்படுபவா்கள் சேகரிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தங்கத்தை விடுங்க.. தங்க பத்திரம் வாங்குங்க - எங்கே, எப்படி, எவ்வாறு? முழு விபரம்