என்ஜினியரிங் படிச்சுருக்கீங்களா? கை நிறைய சம்பளத்துடன் மத்திய அரசு வேலைக்கு அப்ளை பண்ணுங்க!

மத்திந அணுசக்தித்துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குகிறது.

ECIL Recruitment 2024 Notification for Deputy Manager Posts, Apply Now sgb

பொதுத்துறை நிறுவனமான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஹைதராபாத் அலுவலகத்தில் துணை மேலாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அணுசக்தித்துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல மின்னனு தயாரிப்புகள் தொடர்பாக இயங்கிவருகிறது. இந்நிறுவனத்தில் மொத்தம் 14 காலிப் பணியிடங்கள் உள்ளன. காலிப் பணியிடங்கள் விவரம் பின்வருமாறு:

TECHNICIAN (GR-II) (WG-III)

Deputy Manager-Technical (Embedded Systems-Hardware) - 2

Deputy Manager-Technical (Embedded Systems-Software) - 3

Deputy Manager-Technical (Power Electronics) - 2

Deputy Manager-Technical (Mechanical Design) - 2

Deputy Manager-Technical (Radio Frequency Systems) - 4

Deputy Manager-Technical (Cyber Security) - 1

கல்வித்தகுதி:

இசிஇ, இஇஇ,சிஎஸ்இ, மெக்கானிக்கல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் பொறியியல் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்யலாம். பவர் எலக்ட்ரானிக்ஸ், ரேடார், மைக்ரோவேவ் பிரிவில் எம்இ., எம்.டெக் முடித்தவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பதும் அவசியம்.

வயது வரம்பு:

13.4.2024 அன்று 32 க்கு உட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப 5 முதல் 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வும் உண்டு. வயது வரம்பு பற்றிய விரிவான விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்த்துக்கொள்ளலாம்.

சம்பளம்:

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பில் வெவ்வேறு பணியிடங்களுக்கு ஏற்ப மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். www.ecil.co.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ரூ.1000 விண்ணப்பக் கட்டணத்தை ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் எடுத்து, தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனைத்திலும் சான்றொப்பம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்பவேண்டிய முகவரி:

Deputy General Manager,

Human Resources (Recruitment Section),

Electronics Corporation of India Limited,

Administrative Building, Corporate Office, ECIL (Post),

Hyderabad – 500062, Telangana State.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.5.2024

இந்த வேலைவாய்ப்பு பற்றி கூடுதல் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED - RECRUITMENT OF DEPUTY MANAGER (TECHNICAL)

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios