Asianet News TamilAsianet News Tamil

தூர்தர்ஷன் நியூஸ் சேனலில் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

தூர்தர்ஷன் சேனலில் வீடியோகிராபர் பணிக்கு 41 காலியிடங்கள் முழுநேர ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Doordarshan Recruitment 2023: Check Posts, Age, Qualification, Salary and How to Apply
Author
First Published Apr 18, 2023, 10:58 PM IST | Last Updated Apr 18, 2023, 11:04 PM IST

தூர்தர்ஷன் செய்திச் சேனலில் முழுநேர ஒப்பந்த அடிப்படையில் வீடியோகிராபர் பணிக்கு அனுபவமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது. இந்த தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வீடியோகிராபர் பணிக்கு 41 காலியிடங்கள் உள்ளன.

40 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பட்சத்தில் டெல்லியில் பணியமர்த்தப்படுவார்கள். மாத சம்பளம் ரூ.40000 கிடைக்கும். எழுத்துத் தேர்வு / நேர்காணல் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறும்.

போட்டித் தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பள்ளிப் படிப்பையும் ஒளிப்பதிவு / வீடியோகிராஃபியில் துறைகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். வீடியோகிராபி / ஒளிப்பதிவு அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் தேவை. MOJO பயன்பாட்டில் தேர்ச்சியும் குறும்படம் தயாரிக்கும் அனுபவமும் இருந்தால் நல்லது.

Doordarshan Recruitment 2023: Check Posts, Age, Qualification, Salary and How to Apply

முழுநேர ஒப்பந்த அடிப்படையில் பணிக்குத் தேர்வானால் மாத ஊதியமாக ரூ.40,000 கொடுக்கப்படும். பணி ஒப்பந்த காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு தேதியிலிருந்து 15 நாட்கள் ஆகும். இறுதி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

SBI PO Final Result 2023: ஸ்டேட் வங்கி பி.ஓ. தேர்வு முடிவுகள் வெளியீடு; உடனே டவுன்லோட் பண்ணுங்க!

ஏற்கனவே 18.04.2023 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டது. ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://applications.prasarbharati.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டால், ஸ்கீன்ஷாட் எடுத்து hrcell413@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவி கோரலாம்.

டிடி நியூஸ் வீடியோகிராபர் பணிக்கான வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரம் அறிய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து பார்க்கவும்.

NIA for contractual engagement of Videographer at New Delhi in Prasar Bharati

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios