CUET UG Result 2023 : கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியானது - தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
அனைவரும் எதிர்பார்த்த கியூட் தேர்வு CUET UG முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஐஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு யுஜிசி சார்பில் வெளியிடப்பட்டது.
கடந்த மே மாதம் 21ஆம் தேதி தொடங்கிய கியூட் தேர்வு, 31 ஆம் தேதி முடிவடைந்துள்ளது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இளநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
1.கியூட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளமான cuet.samarth.ac.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
2.முகப்புப் பக்கத்தில் காட்டப்படும் ‘CUET UG 2023 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3.விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்றவைகளை பதிவு செய்ய வேண்டும்.
4.CUET UG முடிவு 2023 திரையில் காட்டப்படும்.
5.எதிர்கால தேவைக்காக உங்கள் முடிவைப் பதிவிறக்கி பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
இது 140 கோடி மக்களின் கவுரவம்.. இந்தியா - பிரான்ஸ் உறவை பற்றி பிரதமர் மோடி பேசியது என்ன?