சென்னை மெட்ரோவில் 2 லட்சம் சம்பளத்தில் வேலை.. எப்போது விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள General Manager, Joint General Manager மற்றும் Deputy General Manager ஆகிய பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.  
 

CMRL GM, JGM, DM posting recruitment 2022

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள General Manager, Joint General Manager மற்றும் Deputy General Manager ஆகிய பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் General Manager ஒரு பணியிடமும் Joint General Manager  ஒரு இடமும் மற்றும் Deputy General Manager ஒரு இடமும் என மொத்தம் 3 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது 

இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளவை: General Manager (Planning & Business Development) பணிக்கு AICTE அல்லது UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Marketing, Finance பாடப்பிரிவில் MBA Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே போல் Joint General Manager (Finance & Accounts) பணிக்கு AICTE அல்லது UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Finance பாடப்பிரிவில் CA அல்லது MBA Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு.. கதறி அழுத தேர்வர்கள்.. சீர்காழியில் நடந்தது என்ன..?

மேலும் Deputy Manager (Corporate Affairs) பணிக்கு AICTE அல்லது UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electrical, Electronics பாடப்பிரிவில் B.E, B.Tech மற்றும் <Marketing பாடப்பிரிவில் MBA Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்  பிரிவுகளில் குறைந்தது 4 வருடம் முதல் 20 வருடம் வரை அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னூரிமை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பினை பொறுத்தவரை General Manager பணிக்கு  45 வயது முதல் 55 வயது உள்ளவர்கள் தகுதியானவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.  அதே போல், Joint General Manager பணிக்கு அதிகபட்சம் 43 வயதுள்ளவர்களும் Deputy Manager பணிக்கு  அதிகபட்சம் 35 வயதுடையவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பளத்தை பொறுத்தவரை GM பணிக்கு மாதந்தோறும் 2,25,000 ரூபாயும், JGM பணிக்கு மாதந்தோறும் 1,25,000 ரூபாயும் DM பணிக்கு மாதந்தோறும் 70,000 ரூபாயும் சம்பளமாக வழங்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது.   மெட்ரோ  நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:பள்ளிக்கு மாணவர்கள் மொபைல் போன் கொண்டு வரலாமா..??? அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து கட்டணமாக தகா ரூ.300 வீதம் வசூலிக்கப்படும். SC மற்றும்  ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு 50 ரூ மட்டுமே  விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். சென்னை மெட்டோர்  நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள,  விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஆக்ஸ்ட் 3 ஆம் தேதிக்குள் விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios