சென்னையில் மத்திய அரசு வேலை.! 12ம் வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றால் போதும்! ரூ.80,000 வரை சம்பளம்..!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் ஐசிஎம்ஆர் செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலின் கீழ் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமான என்.ஐ.ஆர்.டி இயங்கி வருகிறது.
ஐசிஎம்ஆர் கட்டுப்பாட்டில் சென்னையில் இயங்கி வரும் என்ஐஆர்டி-யில் 7 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் ஐசிஎம்ஆர் செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலின் கீழ் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமான என்.ஐ.ஆர்.டி இயங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் என்.ஐ.ஆர்.டி. யில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?
அதன் விபரம் வருமாறு:
நிறுவனம்:
ஐசிஎம்ஆர், என்ஐஆர்டி
காலி பணியிடங்கள்:
* ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II - 02 பணியிடங்கள்
* ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I - 11 பணியிடங்கள்
* ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II- 13 பணியிடங்கள்
* ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் III- 01 பணியிடம்
* ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி - 01 பணியிடம்
* சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - 03 பணியிடங்கள்
* ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் - 02 பணியிடங்கள் என மொத்தம் 33 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு + Diploma (MLT / DMLT), 12ம் வகுப்பு + Diploma (MLT / DMLT), Graduate Degree, MBBS, MPH / Ph.D, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
* ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II (மெடிக்கல்), ப்ராஜெக்ட் ரீசர்ஜ் (மெடிக்கல் சர்வே மானிட்டர்) பணிகளுக்கு 40 வயது.
* ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II (லேப் டெக்னீசியன்) பணிக்கு 30 வயது
* ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I (ஹெல்த் அசிஸ்டென்ட்), ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி, சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட், பணிகளுக்கு 28 வயது
* ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (ஹேல்பர்) பணிகளுக்கு 25 வயது. மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பதும் அளிக்கப்படும்.
மாத சம்பளம்:
இந்த ICMR NIRT நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,800/- முதல் ரூ.80,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
பிப்ரவரி 12 மற்றும் பிப்ரவரி 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள Walk-in Written Test / Interview மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ஐசிஎம்ஆர், என்ஐஆர்டி விண்ணப்பிக்கும் வழிமுறை:
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nirt.res.in அல்லது www.icmr.nic.in ஆகிய இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும்.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு படித்தால் போதும்.. இஸ்ரோவில் சேர அருமையான வேலைவாய்ப்பு.. முழு விபரம் இதோ !!
- ICMR
- Project Research Scientist II
- Project Technical Support
- Senior Project Assistant
- government jobs 2024
- icmr nimr recruitment 2024
- icmr nirt recruitment 2024
- icmr recruitment 2024
- icmr recruitment 2024 apply online
- icmr recruitment 2024 lab technician
- nirt recruitment 2024
- nirt recrutment notification 2024
- Project Multi Tasking Staff