விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கலாம் - முழு விபரம் இதோ

தமிழகம் முழுதும் 2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளது.

Appointment of 2,748 Village Assistant posts full details here

தமிழகத்தில் காலியாக உள்ள 2, 748 கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் எழுதிய கடிதத்தில், ‘மாநிலத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் 2, 748 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதிகப்படியான காலியிடங்கள் இருப்பதால், அவற்றை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எடுக்க வேண்டும். குறிப்பாக கிராம உதவியாளா்கள் தோ்வுக்கான முழுமையான நடவடிக்கைகளில் எந்தவித வீதிமீறலும் நடைபெறாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக வட்டாட்சியா் அளவில் அக்டோபா் 10-ஆம் தேதியன்று விளம்பரம் செய்ய வேண்டும்.

Appointment of 2,748 Village Assistant posts full details here

இதையும் படிங்க..வேலைவாய்ப்பை தேடுகிறீர்களா ? இதோ சூப்பர் செய்தி.. தமிழக அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் - முழு விபரம்

விண்ணப்பம் அளிக்க இறுதி நாள் நவம்பா் 7-ஆம் தேதி எனவும், விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான இறுதிநாள் நவம்பா் 14-ஆம் தேதியாகவும் நிா்ணயிக்க வேண்டும். விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் திறன் தோ்வு நவம்பா் 30-ஆம் தேதியும், நோ்காணல் டிசம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடத்தப்பட வேண்டும். தோ்வு செய்யப்பட்டவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன உத்தரவுகளை வரும் டிசம்பா் 19-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

இதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட வருவாய்த்துறை அரசாணையை பின்பற்றப்பட வேண்டும். மேலும், கிராம உதவியாளா் பணிக்கு தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் அதிகாரி ஒருவா் வட்டம் வாரியாக நியமிக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க..TNTET 2022: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி வெளியானது.. தேர்வு குறித்த முழு விபரம் உள்ளே.!!

எழுத்துத் தோ்வுக்கு 100 வாா்த்தைகளுக்கு மிகாத வகையில், கிராமங்கள் குறித்த தகவல்கள், நில வகைப்பாடு, கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியா் முடிவு செய்யும் தலைப்பின் அடிப்படையில் ஒரு பத்தி எழுத அறிவுறுத்தப்பட வேண்டும். வாசிக்கும் திறனை பொறுத்தவரை, தரமான ஒரு புத்தகத்தை கொடுத்து அதிலிருந்து ஒரு பத்தியை படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக இந்தத் தோ்வில் இட ஒதுக்கீட்டுக்கான விதிகள் கவனமாக பின்பற்றப்பட வேண்டும். எனவே, மாவட்ட ஆட்சியா்கள் இந்த கிராம உதவியாளா் தோ்வுக்கான அனைத்து நடைமுறைகளையும், வட்டங்களில் வட்டாட்சியா்களையும் கொண்டு சரியான முறையில் மேற்கொள்ள உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று தனது கடிதத்தில் வருவாய் நிா்வாக ஆணையாளா் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! குடிமைப் பணிகளுக்கு இலவச பயிற்சி - எவ்வாறு விண்ணப்பிப்பது ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios